|
ஐரோப்பாவின் பாதுகாவலர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஸ்வீடனைச் சேர்ந்த புனித
பிரிஜித்தாவின் (பிரிஜித்தம்மாள்) வெளிப்பாடுகள்
புனித பிரிஜித்தா புனிதர் என்பதை திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ் மற்றும் திருத்தந்தை ஐந்தாம் மாரட்டின் என்ற இருவரும் உறுதி செய்துள்ளனர். |
|
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. தங்களது தாய் மொழியிலும், பிற மொழிகளிலும் நன்றாக மொழி பெயர்க்கும் திறமையுள்ள சகோதர சகோதரிகள் எங்களுக்குத் தேவை. மேலும், எம்.பி.3 ஆடியோ புத்தகங்களை தயாரிக்கும் திறமையுள்ளவர்களும் எங்களுக்குத் தேவை. இதைப் படிக்கும் உங்களது உதவியுடன் ஒரு நாள் நிச்சயமாக 50 மொழிகளில் இந்த இணையத் தளத்தை உருவாக்க எங்களுக்கு ஆவல். பிற மொழிகளில் ஏற்கனவே புனித பிரிஜித்தாவின் திருவெளிப்பாடுகள் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை அவரது கொடைகளால் ஆசீர்வதிப்பார். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களை ஆசீர்வதிக்கிறோம். நீங்கள் உண்மையிலேயே காப்பாற்றப்பட வேண்டுமென்று விரும்பினால் கடவுள் அருளிய இந்தத் திருவெளிப்பாடுளை உங்கள் உயிருள்ளவரை தினந்தோறும் படியுங்கள். ஏனென்றால் சாத்தான் நீங்கள் படிப்பதை நிறுத்துவதற்கு பல வழிகளில் முயற்சி செய்வான். அவ்வாறு நீங்கள் படிப்பதை நிறுத்தும்போது இவை அனைத்தையும் மறந்து நீங்கள் மீண்டும் பாவத்தில் விழ ஏதுவாகிவிடும். இத் திருவெளிப்பாடுகளை நீங்கள் எப்போதும் படிப்பதற்கு ஏதுவாக இவற்றை அச்சிட்டு (பிரிண்ட்) வைத்துக் கொள்ளுங்கள். விவிலியத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல இருளின் நேரம் வரும்போதும் கூட நீங்கள் இவற்றை படிக்க முடியும். இந்தப் புத்தகம் நம் பாவக்கறைகளை நேருக்குநேர் பார்க்க வழிவகுக்கும் ஒரு கண்ணாடி. ஒவ்வொருவரின் ஆன்மாவைச் சோதனையிட்டுக் கொள்வதற்கும் கடவுளுக்கு பிடித்தமானவற்றையும் பிடிக்காதவற்றையும் அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிப்பதால் நாம் கடவுளை எவ்வாறு அன்பு செய்யவேண்டும் என்றும் அதைப்போலவே நமது அயலாரையும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்றும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இவ்வுலக இன்பங்களைவிட இறைவனுக்காக நாம் பாடுபடும்போது மேலுலகில் நமக்குக் கிடைக்கும் பேரின்பம் எவ்வளவு மேலானது என்பதையும் உணரந்து கொள்ள முடியும். துன்ப நேரத்தில் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் வளமாக வாழும்போது தற்பெருமை கொள்ளாதிருக்கவும் நாம் உயரவடையும்போது இறுமாப்படையாமலும் துன்பவேளையில் துவண்டுவிடாமலும் நாம் வாழ நமக்கு அறிவுறுத்துகிறது. புனித பிரிஜித்தா மிகவும் உயர்ந்த, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பம் முழுவதும் இயேசுவில் விசுவாசம் கொண்டு, ஏராளமான இவர்களது சொத்துக்களை பல கோவில்களுக்கும், மடங்களுக்கும், ஏழைகளுக்கும் வாரி வழங்கியவர்கள். தனது 10வது வயதில், சிலுவையில் தொங்கும் இயேசுவின் தரிசணம் கிடைத்தது. அப்போது அவர், “பார், நான் எவ்வளது துன்பம் அனுபவிக்கிறேன் என்று பார்” என்றுரைத்தார். தற்போதுதான் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, “ஓ ஆண்டவரே, இதை உமக்கு யார் செய்தது? என்று கேட்க, “என்னை நிந்திப்பவர்களும், எனது அன்பை மறந்தவர்களுமே இவ்வாறு எனக்குச் செய்தனர்” என்று இயேச பதிலுரைத்தார். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, பிரிஜித்தா கன்னியர் மடத்தில் சேர்ந்து, தனது சொத்துக்கள் அனைத்தையுமே ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டார். இவரது தீர்க்கதரிசனங்களில் பல நிறைவேறிவிட்டன, இன்னும் சில நிறைவேற வேண்டியுள்ளன. இவரது தீர்க்கதரிசனங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கிலாந்து மற்றும் பிரன்சு சாம்ராஜ்ஜியங்களைப் பற்றியது. இந்த இரண்டு நாடுகளும் 20 ஆண்டுகளுக்கு சண்டையிடும் என்றும், அதன் இறுதியில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் திருமணம் முடியும் என்று நம் ஆண்டவர் இயேசு பிரிஜித்தாவிற்கு முன்னுரைத்தது முழுமையாக நிறைவேறியது. புனித பிரிஜித்தாவின் திருவெளிப்பாடுகளையும், தீர்க்கதரிசனங்களையும் உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகளுக்கு அறிவிப்பதற்கு, உங்கள் நன்கொடை மூலமாக எங்களுக்கு உதவுங்கள். அத்தோடு உங்களது செபங்களும் எங்களுக்குத் தேவை. tamil@saintbirgitta.com என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். (முடிந்தால் உங்கள் கடிதங்களை ஆங்கில மொழியில் எழுதுங்கள் நன்றி.) |